வேதாகம தியானமும் புற புராண தியானமும்

நாம் வேதத்தை தியானிப்பது என்பது, திரும்ப திரும்ப வேத வசனத்தை படிப்பதும் ஆழ்ந்த வெளிப்பாடு பெற்றுக் கொள்வதும் ஆகும். அச்சமயத்திலே ஆவியிலே படித்து புதிய வெளிப்பாட்டையும், ஆண்டவரோடு உறவும், ஜக்கியமும் பெற்றுக்கொள்கிறோம்.

தேவ ஆவியானவர் வழி நடத்துகிறார். வேதத்தை தினம் தினம் படிக்க படிக்க
நம் உள்ளம் சுத்தமாவதை உணரலாம். நம் செயல்களும் வேறுபடும். இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்று விசுவாசித்து இரட்சிப்பை பெற்று இருக்கிறோம். நித்ய ஜுவன் (அ) நீடிய வாழ்வு உண்டு. கடைசி வரை விசுவாச வாழ்க்கையில் நிலைத்து நிற்கிறோம். பாவ மன்னிப்பையும் பெற்று கொள்கிறோம். நமக்கு ஆண்டவர் காட்டிய வழி சத்தியம். பரலோக நித்திய ஜுவ வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றவர்களுக்கோ மூடப்பட்டுள்ளது. நாம் ஆத்ம பாரம் கொண்டு அவர்களுக்காக ஜெபிப்போம்.

மற்ற மார்க்கத்தில் கடவுளை தேடுகிறார்கள் பழங்காலத்தொட்டு.
அவர்கள் சித்தர்களாகவும், அடியார்களாகவும்,யோகிகளாகவும், மகரிஷிகளாகவும் என்று பல்வேறு பெயர்களில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மூடி வைக்கப்பட்டுள்ள வாசலை திறக்க முயற்சி செய்கிறார்கள், அதுவும் கள்ளச்சாவி போட்டு. அது திறக்குமா என நீங்களே சொல்லுங்கள். உடல் பராமரிப்புக்கு சரி எனலாம். மனிதன் தன் உள் மனதில் பாவத்தை சுமந்து கொண்டு இதயத்தை சுத்தம் செய்ய யோகா மூலம் முக்தி அடைய கடவுளை தேட முயல்வது, சொர்க்கம் போக எத்தனிப்பது, மனந்திரும்புதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்பதை எவ்வளவு நிராகரிக்கிறது.

சில மார்க்கத்தார் இயேசு கிறிஸ்து படத்தை மற்ற படத்தோடு (கிருஷ்ணா) வைத்து வணங்கி தியானிக்கிறார்கள்.ஏன் வேத வசனத்தை படிக்கிறார்கள். பாவத்தை அறிக்கை இடுவது இல்லை. விசுவாசமே இல்லை. இந்த மார்க்கத்தில் இந்துக்களோடு கிறிஸ்துவர்களும் சேர்ந்து இருப்பது இரண்டு மாஸ்டருக்கு ஊழியம் செய்வதுபோல, அது மாஸ்டரே இல்லை என்கிறதை அறியாமையில் உணராமல் இருக்கிறார்கள். 10 கட்டளைகளில் முதல் நான்கு கட்டளைகளை மறந்ததுபோல் இருக்கிறார்கள்.
பைபிள் ஒரு சரித்திர புத்தகம் என்பதைவிட்டு புராண புத்தகங்களை நம்புகிறார்கள்.
பத்துல ஒரு கடவுள் இயேசு கிறிஸ்து அல்ல ஒரே கடவுள் ஏழு ஏழு கண்டத்திற்க்கும் ஒரே தேவன் இயேசு கிறிஸ்து
மாத்திரமே.

மோட்சம் வேண்டும், நிம்மதி வேண்டும், பரிகாரம் வேண்டும் என்று அலைகிறார்கள். பரிதாபமாய் உள்ளது. பரிகாரியாகிய கர்த்தர் ஓருவர் உள்ளார் என்பதை எடுத்து சொல்வோம். பரலோக வாசலின் சாவி இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே என மற்ற மார்க்கத்தார் உணர நாம் சுவிசேசம் அறிவிக்க வேண்டும்.

image

Author: tamilmani146

I am in Christ , VRS from Railways, worked as Sr. Section Engineer - Telecom. Happy in Christ - Focusing Lord Waiting'for His grace and compassion (IIsaiah 40:31). Jesus hand touched my head to bless in middle of 2012. Holy spirit guides for my writings.

Leave a comment