மனிதனுக்கு எதிரான சாத்தானின் ஆயுதங்கள்

image

2 கொரிந்தியர் 4 : 4 
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரசன்னமாகும்படிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

© 1. மனதைக் குருடாக்குவது சாத்தானின் ஒரு ஆயுதம்.

ஆதியில் பரலோகத்தில் இருந்து  தள்ளப்பட்டவனே சாத்தான்.  பரலோக சிம்மாசனத்திற்க்கு ஆசைப்பட்டதால் வெட்டி வீழ்த்தப்பட்டவன். 
(ஏசய்யா 14 :12-15)
தேவனுக்கு எதிராக ஒரு கூட்டத்தை சேர்த்து அவிசுவாசிகள் மனதை குருடாக்குகிறான்.

ஆதியாகமம் 3 : 15
(சர்ப்பம்)உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் (இயேசு) உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

சாத்தான் நினைத்தது போல் இயேசு கிறிஸ்து மரித்தாலும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்பதை அவன் அறியவில்லை. 
ஆதாம் காலத்திலிருந்து ஸ்திரயையும வித்தையும்  ஆபிரகாம்,மோசே,தாவீது
் முதல் தேடியும் தேவனின் ஆவிக்குரிய திட்டத்தை அறிய முடியவில்லை.

© 2.   அவன் கண்காணிக்கும் ஆயுதம்.

மத்தேயு 4 : 8
மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9  நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

© 3. பிசாசிற்க்கு தரிசனங்களை காட்டவும் முடியும்.  இதுவும் ஒரு ஆயுதம். 

ஏமாந்து விடக்கூடாது.
சாத்தான் இயேசுதான் வித்துவா என கண்டறிய தந்திரம் செய்தான்.இயேசு பசியோடு இருந்ததால் கல்லை அப்பம் ஆக்க முடியுமா என ஆசைக் காட்டினான். ஆனாலும் கர்த்தர் ஞானமாகப் பேசினார்.

1 பேதுரு 2 : 11  பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்.

© 4. மாம்ச இச்சைகளை ஈர்க்க வைப்பதும் சாத்தானின் ஆயுதம்.

எபிரெயர் 12 : 15
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
16  ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

© 5. கசப்பான வேர்கள்களை நமக்குள் ஊடுருவச் செய்வதும் சாத்தானின் ஆயுதம். 

1 யோவான் 2 : 15  உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
16  ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

© 6. உலகப் பொருளின் மீது ஆசை உண்டாக்குவது,  இதுவும் ஒரு ஆயுதம்.

கலாத்தியர் 5 : 19
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20  விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21  பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

© 7. இவைகளே அவனுடைய கடைசி ஆயுதம்.

தேவ ஆவியானவரின் துணையோடு பிசாசை எதிர்த்து நில்லுங்கள். யார் தரும் தரிசனம் என்றும், யாருடைய கட்டளை என்றும் பகுத்து அறிந்துக் கொள்ளுங்கள். இயேசுவோடு நாம் கொண்டிருக்கும் ஐக்கியம், உறவினால் நலமானதை எளிதாக அறியலாம்.

மூலம் : போதகர். ஓசியா

Author: tamilmani146

I am in Christ , VRS from Railways, worked as Sr. Section Engineer - Telecom. Happy in Christ - Focusing Lord Waiting'for His grace and compassion (IIsaiah 40:31). Jesus hand touched my head to bless in middle of 2012. Holy spirit guides for my writings.

Leave a comment